படுகொலை செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக், அரசியல் தலைவர் என்பதை தாண்டி பாலிவுட்டே இரு அணிகளாக பிரிந்து செயல்படும் அளவுக்கு கொழுந்துவிட்டெரிந்த ஷாருக்கான் -சல்மான்கான் இடையேயான சண்டையை தீர்த்து வைத்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலால் பாலிவுட்டே இரண்டாக பிரிந்து கிடந்தது. அப்போது இஃப்தார் விருந்துக்கு இருவரையும் அழைத்த சித்திக், இருவர் இடையே நிலவி வந்த மனஸ்தாபத்தை தீர்த்து வைத்தார்.