ஆவின் பால் நிறுவனம் இருப்பதால் தான், மற்ற தனியார் நிறுவனங்களால் பால் விலையை உயர்த்த முடியவில்லை என்றும், அதேபோல பால் கொள்முதல் விலையை குறைக்க முடியவில்லை என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் விலை மற்றும் கொள்முதல் விலையை சரிசமமாக சமாளிப்பது ஆவின் நிறுவனம் தான் என்று கூறினார். தற்போது வரை தினந்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறியவர், நடப்பு ஆண்டில் அதன் அளவை 40 முதல் 45 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.