ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா, ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தின் இறுதியில் 6க்கு 2, 2க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.