ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு இந்தியாவின் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார். சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், 6ஆவது இடத்தில் உள்ள தைவானின் தியன் செனை எதிர்கொண்டார். முதல் செட்டை 17-க்கு 21 என இழந்த லக் ஷய சென், அடுத்த இரு செட்டுகளையும் 24-க்கு 22, 21-க்கு16 என தியன்செனை வென்றார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் யுஷி டனகா உடன் லக் ஷயா சென் மோதவுள்ளார்.