மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனைகள் அபாரமாக விளையாடினர். இதனால் அந்த அணி 24புள்ளி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.--