உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை, இருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டதன் திக் திக் நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வேலை இழந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்நபர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.