போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிசேரியா நகரில் உள்ள பிரதமர் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீட்டின் முன்பகுதியில் திடீரென வெடிபொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.