ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஆதரிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நிகழ்த்த வாய்ப்புள்ளது என்றார். மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.