இரும்பு பெட்டியுடன் சரக்கு வாகனத்தில் பயணித்த இளைஞர்கள். பெட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் சந்தேகம். பெட்டிக்குள் மனித எலும்புகளும், சிதைகளும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர். இரண்டு இளைஞர்களையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். பெட்டிக்குள் கிடந்த மனித எலும்புகள் யாருடையது? பின்னணி என்ன?இரும்பு பெட்டியில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்ஒரு பெரிய இரும்பு பெட்டியோட சரக்கு வாகனத்துல இரண்டு இளைஞர்கள் பயணிச்சுட்டு இருந்தாங்க. அப்ப அந்த இரும்பு பெட்டியில இருந்து பயங்கர துர்நாற்றம் வீசிருக்கு. இதனால பாதி வழியிலையே வாகனத்த நிறுத்துன ஓட்டுநர் ஜெய்சிங், உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாரு. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சரக்கு வாகனத்துல இருந்து அந்த பெட்டிய கீழ இறங்கி, தொறந்து பாத்துருக்காங்க. அதுல பாதி எரிஞ்ச நிலைல மனித எலும்புகளும், உடல் பாகங்களும் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச போலீஸ், இளைஞர் நிதின போலீஸ் ஸ்டேஷன் கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. அப்ப என் தந்தை ராம் சிங் தான், இந்த பெட்டிய எங்ககிட்ட கொடுத்து விட்டாரு, இதுக்குள்ள மனித எலும்புகள் கிடந்தத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது, அதனால தயவு செஞ்சு எங்கள விட்ருங்கன்னு கெஞ்சுருக்காங்க. நிதின் சொன்ன தகவல வச்சு ராம்சிங்க தேடி அவரோட வீட்டுக்கு போய்ருக்காங்க போலீஸ். அப்ப ராம்சிங் வீட்ல இல்ல. இதனால ராம்சிங் எங்க தப்பிச்சு போனாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். ஆனா ராம்சிங்க பத்தி எந்த ஒரு துப்பும் கிடைக்கல. ப்ரீத்தியுடன் லிவ் இன் உறவில் இருந்த ராம்சிங்உத்தரப்பிரதேசத்துல உள்ள ஜான்சி பகுதிய சேந்தவரு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ராம் சிங். இவருக்கு ரெண்டு மனைவிகள் இருக்காங்க. ஒரு மனைவி சிப்ரி பஜார் பகுதியிலையும், மற்றொரு மனைவி சிட்டி கோட்வாலி பகுதியிலையும் தனித்தனியா வசிச்சுட்டு இருக்காங்க. இதுக்கிடையில ராம்சிங்-கிற்கு அதே பகுதிய சேந்த 35 வயசான ப்ரீத்தி கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ஆரம்பத்துல நார்மலா பேச ஆரம்பிச்சவங்க, ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்டு, ரொம்ப நெருக்கம் ஆகிருக்காங்க. இந்த நெருக்கமே அவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்காம லிவ்-இன்ல வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க.ராம்சிங்கிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்த ப்ரீத்திஇந்நிலையில ப்ரீத்தி, ராம் சிங் கிட்ட இருந்து அடிக்கடி பணத்த வாங்கி, தேவையில்லாம செலவு பண்ணிட்டு இருந்துருக்காங்க. இது ராம்சிங்கிற்கு சுத்தமா பிடிக்கல. இதனால கடுப்பான ராம்சிங், பணத்த ஏன் உன் இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு இருக்க, இனிமே நான் உனக்கு பணம் தரமாட்டேன், உனக்கு எதுவும் தேவைன்னா என்கிட்ட கேளு, நானே வாங்கிட்டு வந்து தர்றேன்னு சொல்லிருக்காரு. இதகேட்டு ஆத்திரமடைஞ்ச ப்ரீத்தி, ராம்சிங் கிட்ட சண்டை போட்ருக்காங்க. நான் கேக்குற நேரத்துல எனக்கு நீ பணத்த கொடுக்கலனா நான் உன்ன விட்டு பிரிஞ்சு போய்ருவேன்னு மிரட்டிருக்காங்க. இதனால கொலை வெறியான ராம் சிங் வீட்ல இருந்த அரிவாள வச்சு ப்ரீத்திய சரமாரியா வெட்டிருக்காரு. இதுல அந்த பெண் சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து துடிதுடிக்க உயிரிழந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாடிய எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்த ராம்சிங், சடலத்த துண்டு துண்டா வெட்டிருக்காரு.நிதின் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீஸ்அடுத்து பக்கத்துல உள்ள கடையில விறகுகள வாங்கிட்டு வந்த ராம்சிங், வீட்டு அடுப்புல விறகுகள அடுக்கி அதுல ப்ரீத்தியோட உடல் பாகங்கள போட்டு, தீ வச்சு கொளுத்திருக்காரு. இதபத்தி அக்கம் பக்கத்தினர் கேட்டப்ப, குளிர் காய்றதுக்காக விறகுகள வாங்கிட்டு வந்ததா சொல்லி ஏமாத்திருக்காரு. அதுக்கப்புறம் எரிஞ்சு போன உடல் பாகங்கள் ஒரு மூட்டைக்குள்ள போட்ட கொலையாளி, அத பக்கத்துல உள்ள ஆத்துல தூக்கி வீசிட்டாரு. ஆனா எரியாம கிடந்த எலும்புகளையும், உடல் பாகங்களையும் வீட்ல இருந்த இரும்பு பெட்டிக்குள்ள போட்ட ராம்சிங், அத தன்னோட இரண்டாவது மனைவியோட வீட்டுக்கு கொண்டு போய் ஒளிச்சு வைக்க ப்ளான் பண்ணிருக்காரு. அதுக்காக தன்னோட மகனையும் அவனோட நண்பரையும் ஃபோன் பண்ணி வரவச்ச ராம்சிங், சரக்கு வாகனம் மூலமா அந்த இரும்பு பெட்டிய அனுப்பி வச்சிருக்காரு. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் நிதின் மற்றும் அவரது நண்பர அரெஸ்ட் பண்ணிட்டாங்க. தலைமறைவா இருக்குற ராம் சிங் போலீசார் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - மலைக்குன்றின் மேல் நடந்தது என்ன?