தமிழகத்தில், பெண்களுக்கு எப்போது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு தரப்போகிறாரோ? என்று, பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததில் இருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். மேலும், அண்ணா பல்கலைக்கழகம், கோவை சம்பவங்களை சுட்டிக்காட்டிய குஷ்பு, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - அழகு குட்டி செல்லம், சிறுவனுக்கு அன்பு முத்தம் கொடுத்த குஷ்பூ | KushbooActress | KushbooViral