பாஜகவிற்கு வேலை செய்யும் இடம்போல துணைநிலை ஆளுநர் அலுவலகம் செயல்படுவதாக டெல்லி முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். அதிஷியை தற்காலிக முதல்வர் என அழைப்பது மன வேதனை அளிப்பதாகவும், அத்தகைய பதவி அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை எனவும் கூறிய துணைநிலை ஆளுநரின் திடீர் பரிவுக்கு அதிஷி பதிலடி கொடுத்துள்ளார்.