ஜம்மு காஷ்மீரில் நாளை முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.அதன்படி ஆப்பிள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 72 ரூபாய் நிர்ணயிக்கப்படும், சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வருடத்திற்கு 4000 பணம் வழங்கப்படும் மற்றும் வேலையில்லா தகுதியுள்ள இளைஞர்களுக்கு மாதம் 3,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.