ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.