சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புடிகால் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரமேஷ் புடிகால் 12.60 புள்ளிகள் பெற்று அசத்தினார். இந்த தொடரில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.