நடப்பாண்டிற்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. சீனாவின் ஹலன்பீர் சிட்டி நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் சீனாவுடன் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி மோதியது. அதில் இந்தியாவின் சுக்ஜீத், உத்தாம், அபிஷேக் தலா 1 கோல் அடித்த நிலையில், இந்திய அணி 3 -க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.