சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்றில், இந்தியா-கத்தார் அணிகள் மோதவுள்ளன.ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி, சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள், 6 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.