சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், IPL மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். TNPL தொடரில் விளையாடி வரும் அஸ்வின், குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் நண்பர்களுடன் சென்று குளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகரித்து பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி தனது நண்பர்களுடன் அங்கு குளித்த அஸ்வின் அது தொடர்பான புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கரடியின் சிசிடிவி காட்சி... காரை பார்த்து பயந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடி