இன்று காலை, ஆயிரத்து 600 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை, பிற்பகலில் ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்தது. சென்னையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் காணப்படும் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 130 ரூபாய் அதிகரித்து, 14 ஆயிரத்து 250 ரூபாயாக இருந்தது. பிற்பகலில் அதிரடி சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பிப்ரவரி 6ஆம் தேதி பிற்பகலில், அதிரடியாக உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை, இன்று காலையில் ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,040 உயர்ந்துள்ளது.வெள்ளி விலை நிலவரம் சென்னையில், இன்று வெள்ளியின் விலை காலையில், ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்தது. பிற்பகலில் எவ்வித மாற்றமின்றி ரூ.280க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிலோ பார் வெள்ளி பிற்பகலில் மாற்றமின்றி ரூ.2,80,000க்கு விற்பனை ஆனது. Related Link 2026 தமிழ்நாடு உரி'மை' யுத்தம்?