டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீடு வரை ரோட் ஷோ நடத்தினர்.அப்போது கொட்டும் மழையிலும் பட்டாசுகளை வெடித்து, மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடி தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தன்னுடைய தைரியம் இப்போது 100 மடங்கு அதிகரித்திருப்பதாகவும், பாஜகவின் சிறைச் சுவர்கள் தன்னுடைய தைரியத்தைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் கூறினார்.