பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விழா, பாலா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அமையவுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.