திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பராமரிப்பு என்ற பெயரில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி கலைஞர் பெயரில் திறப்பது எந்த வகையில் நியாயம் எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.