கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிபந்தனைகளை தளர்த்தி கூடுதலாக சிலரை சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மூலம், சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ருபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் நிபந்தனைகளை தளர்த்தி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் எனவும், இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.