காசாவில், இனப்படுகொலை நடத்தியதாக குற்றம்சாட்டி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, துருக்கி அரசாங்கம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் அதிபர் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தலைவர் உள்பட 37 அதிகாரிகளுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும், அவர்கள் துருக்கி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக துருக்கி அதிபர் எர்டோகனால் வெளியிடப்பட்டிருக்கும் நாடகம் இது என்று, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.