ஜம்மு காஷ்மீரில் பந்திப்போரா மலைப்பகுதியில் ராணுவ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாக பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த 4 வீரர்கள் பலியான நிலையில், 2 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.