கோவையில் 260 கோடி ரூபாயில் அமையும் ராணுவ தொழில் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த வாரப்பட்டி ஊராட்சியில் 422 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கும் பணியில் டிட்கோ ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில் 260 கோடி ரூபாயில் அமையும் இந்த பூங்காவிற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.