தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் அருகே நிகழும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, அனைத்து நீதிமன்றங்களிலும் காவல் துறை எஸ்.ஐ. தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திங்கள் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.