ரஞ்சி போட்டியில் முதல்முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30 புள்ளி 3 ஓவர்களில் 84 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் சிறப்பாக பந்துவீசிய கோவா அணியின் அர்ஜுன் டெண்டுல்கர், 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.