கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவளக்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞர் அகில் என்பவர், எடமுட்டம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்குவந்த மற்றொரு இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர்.