அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா ? இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா ? என முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை எதிர்க்கிறீர்களா? என்றும் அவர் வினவியுள்ளார்.