வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் படத்தின் புரோமோ, திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இன்று யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. சொல்லப்படாத வடசென்னையின் உலகம் என்ற தலைப்பில் இந்த புரோமோ வெளியாகி உள்ளது. 5 நிமிடம் கொண்ட இந்த புரோமோவில், முகம் முழுக்க ரத்தக்கறையுடன் சிம்பு காணப்பட்ட நிலையில் திகிலூட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.