ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ரா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.