அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை நியமித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக குஷ் தேசாய், குடியரசு கட்சியின் 2024 தேசிய மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குநராகவும், அயோவா மாகாண குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.