நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் 6 ஆயிரத்து 526 சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஆப்பிள் இந்தியா, மாத வாடகையாக 48 லட்சத்து 19 ஆயிரம் செலுத்துவதாக சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.