பல்வேறு சாதியினருக்கு ஓபிசி அந்தஸ்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன் தீர்ப்புக்கு எதிராக மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில், அதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு சார்பில் முறையிடப்பட்டது.பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய இந்த பிரிவினரின் ஓபிசி அந்தஸ்தை உயர் நீதிமன்றம் பறித்து விட்டதால், அவர்களின் கல்வி சேர்க்கை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்கே கவுல் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக வாதிட்டார்.