ஈஷா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தவிர்த்து, மற்ற வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா மையத்தில் விசாரணை நடத்துவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் இரு மகள்களை மீட்டுத்தர கோரி தந்தை தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மற்ற நிலுவை வழக்குகளை எவ்விதத்திலும் பாதிக்காது என்று கூறியது.