2025ஆம் ஆண்டுக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மாடல் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மக்களை கவரும் வகையில் தோற்றத்தில் சில மாற்றங்களுடன், சாவி இல்லாத ரிமோட் சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த பைக்கின் விலை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.