உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் பொதுமக்களை தாக்கி வந்த மேலும் ஓர் ஓநாயை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பஹ்ரைச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து பொதுமக்களை தாக்கி வருவது தொடர்கதையாக இருந்தது. இந்நிலையில் ஓநாய்கள் தாக்கியதில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 4 ஓநாய்களை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்த நிலையில் தற்போது மேலும் ஓர் ஓநாய் சிக்கியது. அப்பகுதியில் சுற்றித்திரியும் மற்றொரு ஓநாயை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.