அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கபட்டதை தொடர்ந்து தழிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கபட்டதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அதேபோல், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் எம்பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.