திருவண்ணாமலையில் பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய வழக்கில் தலைமறைவாகி முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஸ்ரீதரன் முதலமைச்சருக்கு பரிசு கொடுத்ததாகவும், முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே அதை பெற்றுக் கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவது திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.