இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளையொட்டி, லைகா நிறுவனம் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோவில், அனிருத் குறித்து ரஜினிகாந்த் பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.