கூலி திரைபடத்தின் 'சிகித்து வைப்' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை, இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினியின் பிறந்த நாளன்று அவர் நடனமாடியுள்ள சிகித்து வைப் பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ரஜினி ஆடிய ஸ்டெப்பை ரீகிரியேட் செய்து அனிருத் வீடியோ வெளியிட்டுள்ளார்.