ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத தயாரிப்பில் மிருக கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடந்த NDA கூட்டத்தில் பேசிய அவர், முந்தைய ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டின் தரம் குறைந்து காணப்பட்டதுடன் அவற்றுக்கு பெரும் பற்றாக்குறை நிலவியதாகவும் கூறினார். தமது ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானம் சுத்தீகரிக்கப்பட்டு, தரமான லட்டு மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக சந்திரபாபு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி, திருமலை மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் புனிதத்தை சந்திரபாபு சீரழித்து விட்டதாகவும், அவரது பேச்சில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.