ஆந்திரா... நள்ளிரவு நேரத்தில் மகன் மற்றும் மகளுக்கு ஃபோன் செய்த தந்தை. தாய் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக நாடகம். 9 மாதத்திற்கு பின் தந்தையின் செல்போனை ஆய்வு செய்த மகன். செல்போனில் இருந்த கொலை திட்டத்தை கண்டு அதிர்ச்சி. தந்தையை கஸ்டடியில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கிய போலீஸ். விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். தாய் கொலை செய்யப்பட்டது ஏன்? 9 மாதத்திற்கு பின் வெளியான கொடூர கொலையின் பின்னணி என்ன?லண்டனில் உள்ள மகனுக்கு ஃபோன் செய்த தந்தை2025ஆம் ஆண்டு. மே 19ம் தேதி. லண்டன்ல உள்ள மகனுக்கு நைட்டு நேரத்துல ஃபோன் பண்ணிருக்காரு தந்தை பிரசாத். அப்ப அந்த ஃபோன எடுத்த மகன், என்னாச்சு எதுக்கு இந்த நேரத்துல ஃபோன் பண்ணிருக்கிங்கன்னு கேட்ருக்காரு. அதுக்கு உங்க அம்மா ரேணுகா தேவி, ஹார்ட் அட்டாக்ல உயிரிழந்துட்டாங்க, நீ உடனே கிளம்பி சொந்த ஊருக்கு வான்னு சொல்லிருக்காரு. அதே மாதிரி ஹைதராபாத்ல வேலை பார்த்துட்டு இருந்த மகளுக்கும் ஃபோன் பண்ணி தாய் உயிரிழந்த விஷயத்த சொல்லிருக்காரு. இந்த செய்திய கேட்டு அதிர்ச்சியடைஞ்ச ரெண்டு பேரும் வீட்டுக்கு போய், தாயோட சடலத்த பாத்து கதறி அழுதுருக்காங்க. அடுத்து ஊர் மக்கள், சொந்தக்காரங்க முன்னிலையில இறுதி அஞ்சலி செய்யப்பட்டு ரேணுகா தேவியோட உடல தகனம் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் தந்தை பிரசாத், தன்னோட ரெண்டு பசங்களோட ஒரே வீட்ல இருந்துருக்காரு.எந்த ஒரு சோகமும் இல்லாமல் இருந்த தந்தை பிரசாத்ரேணுகா தேவி உயிரிழந்ததுக்கு அப்புறம் பிரசாத், எந்த ஒரு சோகமும் இல்லாம ஜாலியா இருந்துருக்காரு. இதுக்கிடையில ரேணுகா தேவி பேருல இருந்த ஒரு வீட்ட தன்னோட பெயருக்கு மாத்திருக்காரு பிரசாத். அதுக்காக வீட்டு பத்திரத்துல மகன் மற்றும் மகள் கிட்ட கையெழுத்தும் வாங்கிருக்காரு பிரசாத். தந்தையோட இந்த செயல் ரெண்டு பசங்களுக்கும் சந்தேகத்த ஏற்படுத்திருக்கு. இதுக்கிடையில மகன் நாகேஷ லண்டனுக்கு கிளம்பி போகும்படி சொல்லிருக்காரு தந்தை பிரசாத். அதுக்கு மகன், அம்மா இறந்து கொஞ்சம் நாட்கள் கூட ஆகல அதுக்குள்ள ஏன் என்ன லண்டனுக்கு அனுப்புறதுல குறியா இருக்கிங்கன்னு கேட்ருக்காரு. அதுக்கு பிரசாத் ஏதேதோ சொல்லி மழுப்பிருக்காரு. இதனால தந்தை மேல சந்தேகமடைஞ்ச மகன், அவரு வீட்ல இல்லாத நேரத்துல அவரோட செல்போன எடுத்து பாத்துருக்காரு. அப்ப பிரசாத்தும், ஜான்சி ராணி-ங்குற பெண்ணும் ஆபாசமாக பேசியிருந்த மெஸேஜ் இருந்துருக்கு. அதே மாதிரி ரேணுகா தேவிய கொலை செய்ய திட்டம் போட்ட மெஸேஜ்களும் இருந்துருக்கு. இத பாத்து அதிர்ச்சியடைஞ்ச நாகேஷ், தந்தை மேல காவல் நிலையத்துல புகார் அளிச்சுட்டாரு. அதுபடி போலீசார் பிரசாத்த கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. அதுல தான் ரேணுகா தேவி ஹார்ட் அட்டாக்கால உயிரிழக்கல, அவங்க கொலை செய்யப்பட்டாங்கன்னும் தெரியவந்துச்சு. பிரசாத்திற்கு ஜான்சி ராணி என்ற பெண்ணுடன் பழக்கம்ஆந்திராவுல உள்ள பெனமலூர் பகுதியை சேந்த பிரசாத் - ரேணுகா தேவி தம்பதிக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. மகன் நாகேஷ் லண்டன்ல வேலை செஞ்சுட்டு இருக்காரு. மகள் தேஜஸ்ரீ ஐதராபாத்துல சாப்ட்வேர் இன்ஜினியரா வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. ரேணுகா தேவிக்கு பேசியல் பண்ண அவங்க தோழி ஜான்சி ராணி அடிக்கடி வீட்டுக்கு வந்துருக்காங்க. அப்ப பிரசாத்தும், ஜான்சிராணிக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டிருக்கு. அந்த பழக்கமே இவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. அதுக்கப்புறம் ரேணுகாதேவி வீட்ல இல்லாத நேரத்துல அடிக்கடி பிரசாத்தோட வீட்டுக்கு போற ஜான்சிராணி அவரோட தனிமையிலையும் இருந்துருக்காங்க. இந்த விஷயம் ரேணுகா தேவிக்கு தெரியவந்துருக்கு. இதனால வீட்ல அடிக்கடி சண்டையும் சச்சரவுமா இருந்துருக்கு. கல்யாணம் முடிக்குற வயசுல ரெண்டு பசங்கள வச்சுக்கிட்டு, இந்த மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கிங்க, உங்களோட கேவலமான இந்த செயல் நம்ம பசங்களோட எதிர்காலத்தையே வீணாக்கிரும், அதனால ஜான்சி கூட பழகுறத நிறுத்திக்கோங்கன்னு சொல்லி கண்டிச்சுருக்காங்க. ஜூஸில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த பிரசாத்ஆனா, பிரசாத் அத பெருசா கண்டுகிறல. ரெண்டு பேரோட தகாத உறவுக்கு ரேணுகா தேவி தொடர்ந்து தடையா இருந்துருக்காங்க. இதனால கணவர் பிரசாத்தும் காதலி ஜான்சிராணியும் ரேணுகா தேவிய கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுபடி மே 18ம் தேதி நைட்டு நேரத்துல மனைவி ரேணுகா தேவிகிட்ட பாசமா நடந்துக்கிட்ட பிரசாத், அவங்களுக்கு ஜூஸ் போட்டு அதுல மயக்க மருந்த கலந்து கொடுத்துருக்காரு. அத குடிச்ச ரேணுகா கொஞ்சம் நேரத்துலையே மயங்கிட்டாங்க. அடுத்து பெட்ரூம்ல இருந்து தலையணையை எடுத்துட்டு வந்த பிரசாத், அவங்க முகத்துல வச்சு அமுக்கிருக்காரு. இதுல மூச்சுத் திணறல் ஏற்பட்டு ரேணுகா தேவி உயிரிழந்துட்டாங்க. அதுக்கப்புறம் இத இயற்கையான மரணம் மாதிரி, செட்டப் பண்ணி நாடமாடிருக்காரு பிரசாத். ஆனா, மகன் நாகேஷ் மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் பிரசாத் மற்றும் ஜான்சிராணிய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. இதையும் பாருங்கள் - நாளை முதல் ஸ்டிரைக்