பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும், அவர்களின் வேலை - வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் work from home என்ற திட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், பெண்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் coworking space எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐடி நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.