பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, அலங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 'உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில், குணாநிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் தயாரிக்கின்றனர்.