தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளும், அதிக வேலை வாய்ப்புகளும் வருவதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பெரம்பலூரில் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.