பா.ம.க சாதி கட்சி என்றால் விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி? என திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தங்களை இழிவுபடுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தார்.கோவில்பட்டியில் பேசிய அவர், பாமக, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், ஆனால் விசிக எந்த மாற்றத்தையும் கொண்டு வந்தது கிடையாது என்றும் கூறினார்.