பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியினர் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.‘‘2024-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில், புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டில் பாமக சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.