உத்தரப்பிரதேசத்தில் இருந்து, மேற்கு வங்கத்திற்கு சென்றவர் மாயமாகி உயிரிழந்து விட்டதாக, குடும்பத்தினர் நம்பியிருந்த நிலையில், 29 ஆண்டுகள் கழித்து, மீண்டும் திரும்பி வந்தவரை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காணாமல் போயிருந்த ஷெரீப் அகமது என்பவர், தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு 1997ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மாயமானவரை குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் அவர் இறந்து விட்டதாக நினைத்தனர். இந்நிலையில், SIR ஆவணங்களை பெற முசாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான கடௌலிக்கு முதியவர் திரும்பினார். உயிருடன் இல்லை என நினைத்த தந்தையை கண்ட மகிழ்ச்சியில் அவரது மகள்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.