குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில், வயதான ஜோடி ஒன்று உற்சாகமாக தாண்டியா நடனமாடிய வீடியோ காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற வயதான ஜோடி, துள்ளலான இசையைக் கேட்டதும் உற்சாகமடைந்து தாளத்துக்கேற்றபடி சுற்றி சுழன்று நடனமாடினர். இதனை பார்த்து பிரமித்து போன இளைஞர்களும், இளம்பெண்களும் தாங்கள் நடனமாடுவதை நிறுத்திவிட்டு, மூத்த ஜோடியின் நடனத்தை ரசிக்க துவங்கினர். மேலும் சுற்றி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ இரண்டே நாட்களில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் கவனத்தை கவர்ந்துள்ளது.